"வேல்! நம்ம பாலா காலைல ட்ரைன் முன்னாடி விழுந்து தற்கொலை செஞ்சுகிட்டனாம். அவன் பெரிய தம்பி போன் பண்ணி சொன்னான். பாடி இவினிங் வருமாம். நீ ஆபீஸ்ல சொல்லிட்டு மூணு மணிக்குள்ளே பீச் ஸ்டேஷன் வந்திடு. நான் பிக்கப் பண்றேன். மத்ததெல்லாம் அப்போ பேசிக்கலாம்", பதற்றமாக சொல்லிவிட்டு மறுமுனையில் லக்ஷ்மன் அலைபேசி அழைப்பை துண்டித்து ஐந்து நிமிடம் ஆகிறது. என்ன செய்வதென்று புரியவில்லை. அவனுக்கு கல்யாணமாகி இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லையே! எதனால் இந்த முடிவு? போன மாதம் நம் வீட்டில் கொடுத்த விருந்தில் கூட கலக்கலப்பக இருந்தானே! நிஜமா, இல்லை கனவா? இல்லை நிஜம்தான். அலுவலகத்தில் சொல்லிவிட்டு வெளியே வந்து பேரம் பேச மனமில்லாமல் "பீச் ஸ்டேஷன் போங்க!" என்று முதலில் வந்த ஆட்டோவில் ஏறி கண் மூடினேன். மனதில் பளிச்சென்று தெரிகிறது பாலாவின் முகம்.
அலுவலகத்திற்கு ரயிலில் செல்லும் நண்பர் கூட்டத்தில் ஒருவன்தான் பாலா; என் பெரிய தம்பி கஜாவின் வயது; கனிவும், பாசமும், பேச்சும், பொறுப்பும், அறிவு கூர்மையும், சிரிப்பும் என் சின்ன தம்பி குட்டியை போல. அதனால் தானோ என்னவோ 'அண்ணா!' என்று ஒட்டிகொண்ட அவன் மீது எனக்கு அளவில்லா பாசம். தன் தந்தையை சிறு வயதிலேயே இழந்து, தாய்க்கு உறுதுணையாய் இருந்து, தானும் படித்து முன்னேறி, தன் இரண்டு தம்பிகளையும் ஆளாக்கியவன். எங்கள் நட்பின் ஆழத்தால் நிழல் போலவே என்னுடன் இருப்பான். பெரும்பாலும் வார இறுதிகளில் ஒன்றாய் ஊர் சுற்றுவோம்; சில வார இறுதிகளில் இரண்டு திரைப்படங்கள் கூட பார்போம். அவனோடு பழகிய இந்த ஆறு வருடங்களில் அவன் இனிய இயல்புகளால் எனக்கு இன்னொரு தம்பியே ஆகிவிட்டான்.
மேலும் படித்து நல்ல வேலையில் காலூன்ற வேண்டுமென்று ஆசைப்படுவதால் திருமணத்தை தள்ளி போட இருந்தவனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க அவன் அம்மாவுக்கு நான்தான் அஸ்திரமானேன். காதல் தோவில்யால் திருமணம் வேண்டாமென்று முப்பதிரண்டு வயதை கடந்து விட்ட என்னால் என் தாயின் மனநிலையை உணர முடிந்தாலும் வேறு ஒரு பெண்ணை ஏற்க மனம் வரவில்லை. ஆனால் பாலாவுக்கு அதுபோல் ஏதும் இல்லை. சில நாட்களின் வற்புறுத்தல்களுக்கு பின் இளம் வயதிலேயே கணவனை இழந்து இந்த அளவுக்கு ஆளாக்கிய தன் தாயின் ஆசைக்கும், என் வார்த்தைக்கும் கட்டுப்பட்டு திருமணதிற்கு சம்மதித்தான்.
கடந்த மூன்று மாதங்களாக என் குடும்பத்தில் நடந்த அடுத்தடுத்த பிரச்சனைகளால் அவன் சொந்த ஊரில் நடந்த திருமணதிற்கு கூட போக முடியாமல் போனது. ஜுரம் என்று கூட படுக்காத எங்கள் அப்பாவுக்கு திடீரென்று மாரடைப்பு வரும் நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. இப்போது பரவாயில்லை என்றாலும், இரண்டு வாரங்கள் மருத்துவமனை அலைச்சல், பணத்திற்கு ஏற்பாடு செய்தது, பெரிய தம்பி கஜா இதையெல்லாம் பெரிதாக எடுத்துகொள்ளாமல் இஷ்டத்திற்கு இருப்பதும், கடை குட்டியினுடன் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களுமென்று இந்த மூன்று மாதங்களாக என்னால் பாலாவுடன் சரியாக பேச கூட முடியவில்லை.
சின்ன தம்பி குட்டிதான் பக்கபலமாய் இருந்தான். அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி, பணத்திற்கு ஏற்பாடு செய்து, மருத்துவமனையில் தங்கி, இப்போது வீட்டிலும் அப்பாவுக்கு அணைத்து பணிவிடைகளையும் முகம் சுழிக்காமல் செய்கிறான். சின்ன வயதிலேயே பெரியவர்களை போல பொறுப்பாக இருந்தவனாயிற்றே! நான்கு வயதுதான் சின்னவன்; ஆனாலும் நானும், கஜாவும் குட்டியை இப்போதும் குழந்தையாகவே பார்க்கிறோம். கஜா மற்ற விஷயத்தில் ஒட்டாமல் இருந்தாலும் குட்டியிடம் மட்டும் அளவு கடந்த பாசம் கொண்டவன். நான் மட்டுமென்? மூன்று மாதங்களுக்கு முன் என் மனதில் அவன்மேல் இருத்த அபரிமிதமான பாசம் இப்போது எங்கே போனது? ப்ஹ்ச்! கண்மூடித்தனமான கோபத்தால் சொல்லக் கூடாத வார்த்தைகளை சொல்லிவிட்டேனே! குழந்தை எப்படி துடித்திருப்பானோ? கண்களில் வேதனையை தவிர, இந்த மூன்று மாதங்களாய் அவனிடம் வேறு பதிலே இல்லை.
ஆட்டோ மந்தவெளியை தாண்டிவிட்டது. மூன்று வாரங்களுக்கு, முன் பாலா கடற்கரைக்கு செல்ல அலைபேசியில் அழைத்தபோது, 'லூசு! கல்யணம் ஆச்சுல்லே. பொண்டாட்டிய கூட்டிட்டு போ! நான் எதுக்கு?' என்று அன்போடு அதட்டியபோது கூட ஏமாற்றத்தோடு 'அதுக்கு என்னண்ணா? நம்ம எப்போவும் போல பிரிண்ட்ஸ் தானே! ம்... பரவால்லணா!' என்றான். ஒரு வேலை ஏதோ என்னிடம் பேசவேண்டும் என்று நினைத்தானோ? நான் பேசி இருந்தால் இதுநடந்திருக்கதோ? ச்சே! நல்ல ஒரு நண்பனுக்கு அவசியமான நேரத்தில் உடனில்லாது போய்விட்டேனே! வாகன நெரிசலால் ஆட்டோ மெதுவாக சென்றாலும் மனக்குதிரை பாய்ந்து ஓடுகிறது.
"சார்! பீச் ஸ்டேஷன் வந்தாச்சு!" ஆட்டோ ஓட்டுனரின் வார்த்தைகள் என்னை நிகழ் உலகத்திற்கு கொண்டுவந்தது. பணத்தை கொடுத்துவிட்டு பீச் ஸ்டேஷன் வாசலுக்கு வந்தேன். லக்ஷ்மனுக்கு குறுந்தகவலை அனுப்பிவிட்டு, தாகசாந்திக்கு தண்ணீர் குடித்துவிட்டு பாலாவும் நானும் காலை வேளையில் வந்திறங்கும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். இன்னும் பிடிபடவில்லை! என்ன பிரச்சனையாய் இருக்கும்? அவன் மனைவி நன்றாகவே பேசினாள். பாலாவை போலவே அவளும் தந்தையை இளம் வயதிலேயே இழந்தவள். ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். எப்படி இதை அவள் தாங்குவாள். திருமணமாகி இரண்டுமாதங்களில் ஏதும் தங்கி இருக்குமோ? அப்படி இருந்தால்... கடவுளே! எண்ண அலைகள் ஓய்ந்தபாடில்லை. "வா வேல் ! போலாம்" என்ற பாலாவின் குரல் காதில் கேட்கிறது. இல்லை! இல்லை! இது லக்ஷ்மனல்லவா? இயதிரமாய் சென்று வண்டியில் ஏறினேன்.
"வேல்! மூணு நாள் முன்னாடி மீட் பண்ணப்போ, ரொம்ப வாட்டமாய் இருந்தாண்டா! உன்கிட்ட ஏதும் சொன்னனடா? உன்னை பாக்கணும்னு சொன்னான். நீ ரெண்டு நாளா வீட்ல இருந்தெல்ல. என்ன பிரச்சனையோ!", லக்ஷ்மனுக்கு என்ன பதில் சொல்வது? "லக்ஷ்மன்! என்னென்ன தேவைன்னு உனக்கு தெரியுமா? பேங்க் போய் கொஞ்சம் பணம் எடுத்துட்டு போலாம். அவன் தம்பிங்க கிட்ட பணம் இருக்கோ, என்னமோ?", நாசுக்காக சொன்னதை அவன் புரிந்துகொண்டு மேலும் பேசாமலே சென்றுகொண்டிருந்தோம். லக்ஷ்மன், 'வேல்! ரோஜா பூ மாலை வாங்கிட்டு போலாம்டா! அவனுக்கு பிடிச்சதுல." என்று உடைத்த குரலில் கூறியபடி வண்டியை மாலை கடைக்கு முன் நிறுத்தினான். ஆமாம்! பல வண்ண ரோஜாக்களை தொட்டியில் வளர்த்து அழகு பார்ப்பானே பாலா...
பாலாவின் தம்பி அவன் அண்ணனின் உடல் வீட்டுக்கு வந்ததை அலைபேசியில் அழைத்து சொன்னான். நான் அம்மாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டு பாலா வீட்டுக்கு சென்றேன். சொந்தங்கள் வந்துவிட்டார்கள். பாலாவின் மனைவி, ராதா மூலையில் அமர்ந்து இருந்தாள். அழுது வீங்கிய கண்கள் அவள் மனதின் பாரத்திற்கு சாட்சி சொன்னது. ஒரு கிழவி அந்த பெண்ணின் தலையில் பூ வைத்துக்கொண்டிருந்தாள். ஏதோ சடங்காம்! இன்று வைத்துவிட்டு பின் எப்போதும் வைக்காதே என்று சொல்லும் சடங்கும், சம்பிரதாயமும் என்னவென்று சொல்வது? 'இந்தியா ஒளிர்கிறது!' என்று நாம் காட்டு கத்தலாய் கதறினாலும், இன்னும் இருட்டிலே இருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்கிறது இது போன்ற சம்பவங்கள். அவன் அம்மா குளிரூட்டும் பெட்டியில் மீளாத்துயிலில் இருக்கும் மகனை பார்த்தபடி இருந்தார்கள். அவன் தம்பிகள் மற்ற வேளைகளில் மும்முரமாய் இருந்தார்கள்.
கொண்டு வந்த பணத்தை அவன் பெரிய தம்பியிடம் கொடுத்துவிட்டு பாலாவின் அருகில் சென்றேன். என்னை நிமிர்ந்து பார்த்த அவன் அம்மா, அடக்க முடியாத துயரத்தால் என் காலை கட்டிக்கொண்டு அழுதார்கள். அவரை வாரி அணைத்து அருகே அமர்ந்தேன். அழகான பாலாவின் முகத்தில் கீறல்கள். பளிங்கு போன்ற முகம் கருத்துவிட்டது. சிதறிய உடம்பை கூறு போட்டு பஞ்சடைத்து பொட்டலமாய் துணி சுற்றி இருதார்கள். ரயில் எங்கோ வந்தால் கூட, 'அண்ணா! ட்ரைன் வருது. பின்னாடி வாங்க!" என்று இழுக்கும் இவனா இப்படி செய்தான்? சில நிமிடங்கள் அவனை பார்த்தபடி இருந்தேன். இன்னும் சில மணிநேரத்தில் பிடி சாம்பலாக போகும் என் அன்பு பாலா! இன்னும் சிலர் வர காத்திருந்தார்கள். என் வீட்டிலும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு போய்விட்டார்கள்.
இறுதியாக பாலாவை சுமந்து நடக்கிறேன். என்னோடு அவன் நடக்கும்போது இலகுவாகும் என் மனம், அவனை சுமப்பதால் இன்னும் கனக்கிறது. பெருகும் கண்ணீரை லக்ஷ்மன் துடைதுவிட்டலும் நின்றபாடில்லை, நம் பாவ மூட்டைகளை சுமந்து ஓயாமல் அழுவதால்தான் கங்கை வற்றுவதில்லை போலும்! பாலாவுக்கு பிடித்த சிகப்பு ரோஜாவால் அவனை அலங்கரித்து இருந்தார்கள், மயானத்தில் கடைசி முறையாய் அவன் நெற்றியை தொட்டேன். குளிர்ந்து இருக்கும் அவன் ஸ்பரிசம் என்னை தகிக்க வைக்கிறது. மின் மயானத்தில் எரி ஊட்ட வைத்தார்கள். சூடாக சாப்பிடும்போது, "ஏன்டா சாப்ட மாட்ற?" என்று கேட்டால், "போங்கண்ணா! நான் என்ன உங்கள போல நெருப்பு கோழியா?" என்று கிண்டலடிப்பான். இதோ முழுதும் நெருப்புக்குள் சென்றும் அவனிடம் சிறிதும் சலனமில்லை!
வீட்டுக்கு வந்து குளித்து முடித்து, அம்மாவின் வற்புறுத்தலால் பால் மட்டும் குடித்துவிட்டு படுத்தேன். என் அறை வழியே சென்ற குட்டியின் பார்வை மேலும் எனக்குள் பாரத்தை கூட்டியது. இதே மூன்று மாதங்களுக்கு முன்னே இருந்தால் குட்டியின் மடி மீது படுத்து அழுது இருப்பேன். கஜா வந்து கேட்டுவிட்டு சென்றான். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் எப்போதும்போல் தன கடமையை ஆற்றும் ஆதவன், "நம் கடமை பணி செய்து கிடப்பதே!" என்று உணர்த்தினான். எழுந்து, குளித்து சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்றேன். ரயிலில் லக்ஷ்மனும் நானும் கலங்கும் கண்களை துடைக்க கூட மனமில்லாமல் இருந்தோம். எதிரே இருந்த சக பயணி அருகே இருக்கும் இன்னொரு பயணியிடம், "நேத்து ஒரு பையன் ரயில் முன்ன விழுந்துட்டனாம்!" என்று அன்றைய அவலை மெல்ல துவங்கினார்.
வேலை மும்முரதால் நாட்கள் ஓடியது. பாலாவின் காரியத்திற்கு போனபோது அவன் மனைவியிடம் சில வார்த்தைகள் பேசினேன். கொஞ்சம் தேறி இருந்தாள். அவன் அம்மாவும் கொஞ்சம் சகஜமாக பேசினார்கள். பாலாவுக்கு பிடித்தவை அனைத்தும் அங்கே இருந்தது. அவனுக்கு என்ன பிடிக்காமல் போனது என்றுதான் தெரியவில்லை. இரண்டு மாதங்கள் கழித்து அவன் மனைவி எனக்கு அலை பேசியில் அழைத்து பேச வேண்டுமென்று சொன்னபோது எனக்கு தயக்கமாக இருந்தது. இவள் ஏன் என்னிடம் பேசவேண்டும்? இதை யாரவது பார்த்தால் மேலும் இவளை காயப்படுத்துவார்கள். விதவைக்கு ஆண்பால் வார்த்தையே இல்லாத சமூகமாயிற்றே! இருந்தாலும் பாலா முடிவின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கவேண்டும்.
உணவகத்தில் வாங்கிய காபி ஆறிவிட்டது, ஆனால் பாலாவை எண்ணி பற்றி எறியும் என் மனம் இன்னும் ஆறியபடில்லை. அவள் கேட்ட முதல் கேள்வி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "அண்ணா! அவர் ஏன் இப்படி செஞ்சுகிட்டார்?" என்ற அவளுக்கு என்னால் என்ன பதில் கூற முடியும்? "அவன் சட்டை பையில் இருந்த கடிதத்தில் கூட, "என் சாவுக்கு நானே காரணம்" என்று மட்டுமே எழுதி இருந்தான். "உன்னை நான் இதே கேள்வி கேட்கனும்னு இருந்தேன்மா! அந்த நேரத்திலே நான் வீடு பிரச்சனல பாலாவோட சரியாய் பேச கூட முடியலை. சந்தோஷமா இருக்குறத சொன்னான். என்ன பிரச்சனமா?" என்று கேட்ட என்னை தயக்கத்துடனே பார்த்துவிட்டு தொடர்ந்தாள்.
"அண்ணா!அவங்க வீட்ல நான் யார்கிட்டயும் இதபத்தி பேச முடியாது. எனக்கு கூட பொறந்த அண்ணன் தம்பியும் இல்ல. அவரும் நீங்களும் நல்ல பிரண்ட்ஸ். உங்கள என் அண்ணனா நினைச்சு உங்க கிட்ட சொல்றேன். நாங்க வாழ்ந்த அந்த ரெண்டு மாசத்தில அவர் என்னோட சரியாய் பேசல. என்னை ஒதுக்கியே வெச்சுருந்தார். அவங்க வீடு ஆளுங்க முன்னாடி கொஞ்சம் சகஜமா இருப்பார். மத்தபடி என்கிட்ட பேச கூட மாட்டார். சில நாட்கள்ல நான் ஒரு ஜீவன் இருக்குறது கூட அவருக்கு தோனல போல. எங்களுக்குள்ளே எது.........எதுவும் நடக்கலே," தொடர முடியாமல் உடைந்து அழுத அவளை தேற்ற மறந்த நான் சிலையாகி இருந்தேன்.
"அண்ணா! என் அப்பா போனதுக்கப்புறம் என் அம்மாவும் நானும் ரொம்ப கஷ்டப்பட்டுதான் முன்னுக்கு வந்தோம். அவரும் அப்படிதானே! அதனாலேயே அவர ரொம்ப பிடிச்சு, ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணினேன். என்னை அவர் விட்டுட்டு அப்படி ஒரு முடிவெடுக்க என்ன காரணம்ணா? அவரோட அம்மா தம்பிங்களபத்தி கூட யோசிக்கலையே!", அடுக்கடுக்கான அவள் கேள்விகளுக்கு என் மௌனம் மட்டுமே பதிலாக இருந்தது. 'ஏன் இப்படி செஞ்சான்? இந்த பொண்ணு எத்தனை கஷ்டத்துல இருந்தா யார்கிட்டேயும் சொல்ல முடியாத இந்த விஷயங்கள என்கிட்ட சொல்லி இருப்பா? "இந்தாங்கண்ணா! அவர் உங்க கிட்ட வாங்கின புக். அவர் இறக்குறதுக்கு முதநாள் நீங்க வந்து கேப்பீங்க, அப்போ உங்க கிட்ட குடுக்க சொன்னார். அவர் உங்கள தினமும் பாக்குறார், எதுக்கு என்னை குடுக்க சொல்றார்னு அப்ப புரியல. இப்போதான் புரியுது", அவள் நீட்டிய அந்த புத்தகத்தை வாங்கி பையில் வைத்துக்கொண்டேன்.
"உன்னை கவலை படாதேன்னு நான் சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டேன். ஆனா நடந்தத நம்மால மாத்த முடியாது. நீ உன்னை தேத்திகிட்டு வாழனும்மா. உனக்கு ஏதும் ஹெல்ப் வேணும்னா எனக்கு ஒரு போன் பண்ணுமா. ஒரு அண்ணனா என்னாலே முடிஞ்சத நான் செய்வேன். நீ கெளம்பும்மா!", கணவனை சமீபத்தில் இழந்த இவளோடு நான் சென்றால் அதுவும் இவளை பாதிக்கும். பாவம்! இன்னும் வாழ்க்கை பாதையில் சரியாய் கால் வைக்க கூட இல்லை, நெறிஞ்சி முள்ளாய் சம்பவங்கள் நடந்தேறிவிட்டது.
வீட்டுக்கு வந்ததும், பாலாவின் கவலைகளை மறக்கடிக்கும் பிரச்சனைகள் தொற்றிகொண்டது. என் மூத்த தம்பி கஜா அம்மாவுடன் வாக்குவாதத்தில் இருந்தான். மிரண்ட கண்களோடு இதை பார்த்துக்கொண்டிருந்த குட்டி, என்னைப் பார்த்ததும் தலை கவிழ்த்து அறைக்குள் சென்றுவிட்டான். இது இரண்டு வருடங்களாக நடக்கிறது. போதைக்கு அடிமையாகி மிருகாமாக நடக்கும் கணவனை பிரிந்து, விவாகரத்து பெற்று, ஒரு குழந்தையுடன் வாழும், அவன் விரும்பும் அமுதாவை, மருமகளாக நாங்கள் ஏற்காததால் இது வாடிக்கையாகிவிட்டது. சமூகம், சொந்தங்கள் என்று காரணங்கள் பல. திரைப்படத்திலும், நாடகங்களிலும் இது நடந்தால் பாராட்ட துடிக்கும் நம்மில் பலர், நிஜ வாழ்கையில் ஏற்க முடியாது இருக்கிறோம். பெரும்பாலும் ஆணும் பெண்ணும் பேசுவதையே தவறாய் பார்க்கும், சமூகத்தில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த பெண்ணும் எங்கள் தெருவில் இருக்கிறாள். நல்ல பெண்தான். படித்து, தனியார் அலுவலகத்தில் பெரிய பதவியில் இருப்பவள். ஆனாலும்...
பாலா இறந்து மூன்று மாதங்களாகிவிட்டது. நேற்று பாலாவின் இளைய தம்பியின் அலைபேசி அழைப்பிலிருந்து ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. எப்படி இது நடக்கிறது? பாலா இறந்து மூன்று மாதங்களே முடிந்த நிலையில், அவன் மூத்த தம்பிக்கும் அவன் மனைவிக்கும் கோவிலில் கல்யாணமாம். அவன் அம்மா என்னை வர சொல்லி இருந்தார்கள். ஒரு வேலை பாலாவின் முடிவுக்கும் இதுதான் காரணமோ? அவன் தம்பியும், மனைவியும் ஏதும் எசகு பிசகாக இருப்பதை பார்த்து இப்படி செய்து கொண்டானோ? அந்த பெண் அப்படி அழுதாளே! ஒரு வேலை பாலா ஏதும் என்னிடம் சொல்லி இருப்பானென்று ஆழம் பார்த்தாளோ? 'குற்றம், நடந்தது என்ன?' போன்ற நிகழ்ச்களால் சாமான்யரும் துப்பறிய தொடங்கிவிட்டோம்!
பாலாவின் வீட்டுக்குசென்று அவன் அம்மாவிடம் நேரடியாக கேட்டேன். அந்த அம்மாவின் பதிலால் உச்சந்தலையில் அறைந்தாற்போல் இருக்கிறது. "வேல்! அந்த பொண்ண என் மகன் இப்படி சின்ன வயசுல நிற்கதியா விட்டுட்டு போய்ட்டான். அவளுக்கு இன்னொரு வாழ்க்கை நல்லபடியா அமைய வேண்டாமா? எங்கள விட அவள யார் புரிஞ்சுக்க முடியும்? அவள் நிலைமை எனக்கும், அவள் அம்மாவுக்கும் நல்லாவே புரியும். இப்படி ஆனா முன்னாடிலாம் ஒதுக்கி வச்சுருவாங்க. இப்போ மக்கள் கொஞ்சமாவது பரவால்லே. இத அவள கஷ்டப்பட்டு ஒத்துக்க வெசோம். அண்ணன் ஸ்தானத்திலே இருந்து இவங்கள ஆசிர்வாதம் செய்பா!".
கல்வி வாசனை குறைவான இந்த அம்மாவின் தொலைநோக்கு பார்வையும், பேச்சும், பொறியியல் முதுகலை படித்து நல்ல வேலையில் இருக்கும் இந்த காலத்தவனான எனக்கு ஏன் இல்லை? கஜா காதலிக்கும் அமுதாவும் இதே நிலையில்தானே இருக்கிறாள். தம்பி அவளை ஏற்று கொண்டானே! நாமும் ஏற்றுக்கொள்ளலாமே! பலவித கேள்விகளுடனே வீட்டுக்கு சென்றேன். அடுத்த இரண்டு நாட்களில் காஜாவிடம் தெளிவாக பேசினேன். எங்கள் வீட்டில் சில பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எல்லோரும் ஏற்றார்கள். அமுதா வீட்டிலும் பேசி இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் நிச்சயித்துவிட்டோம்.
மனம் சற்றே லேசானது. இப்படியே கூடிய சீக்கிரம் குட்டியின் கல்யாணத்தையும் முடித்துவிட்டால் அவன் பிரச்சனைக்கும் ஒரு தீர்வுகிடைக்கும். அன்று சனிக்கிழமை. ரயிலில் கூட்டம் குறைவுதான். உடன் நண்பர்கள் இல்லாததால் புத்தகம் படிக்கலாமென்று பையை துழாவினேன், பாலா மனைவி கொடுத்த புத்தகம் இருந்தது. கனத்த மனதுடன் அதை பிரித்த எனக்கு, உள்ளட்டையில் டேப் போட்டு ஒட்டி மடித்து மேலே, 'டு வேல்!' என்று எழுதி இருந்த காகிதம் ஒரு வித தயக்கத்தை கொடுத்தது. பிரித்து படித்தேன். இறப்பதற்கு முதல் நாள் தேதியிட்டு பாலா எனக்கு எழுதி இருத்த கடிதமது.
"அண்ணா! நான் இந்த உலகத்தை விட்டு போக முடிவு செய்துவிட்டேன். எனக்கு நீங்கள் ஒரு நல்ல நண்பர். என்னுடைய இந்த முடிவின் காரணத்தை உங்களிடம் மட்டுமாவது சொல்லவேண்டுமென்று தோன்றியது. நீங்கள் இதை படித்த பிறகு என்னை வெறுத்தாலும் பரவாயில்லை. நான் எந்த உலகத்தில் இருந்தாலும் உங்கள் மீது வைத்த அன்பும் பாசமும் குறையாது.
நேரடியாக சொல்கிறேன்! இளம் வயதிலிருந்தே எனக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு இருக்கிறது. நான் ஒரு கே! உங்கள் கேள்வி எனக்கு கேட்கிறது அண்ணா! உங்களை அப்படி நான் பார்கவில்லை. நீங்க எப்பவுமே எனக்கு அண்ணன் போல. என்னை பற்றிய இந்த விஷயத்தை அம்மாவிடமோ, தம்பிகளிடமோ சொல்லி புரியவைக்க முடியாது. உங்களிடமும் சொல்ல முயன்றேன், முடியவில்லை! உங்கள் தம்பி விவாகரத்தான பெண்ணை கல்யாணம் செய்வதையே ஏற்காத நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்களென்று தோன்றவில்லை.
எப்படியோ ராதாவை கல்யாணம் செய்து கொண்டு காலத்தை ஓட்டிவிடலாம் துணிந்தேன். ஆனால் அதுதான் நான் செய்த தவறு. அவள் கழுத்தில் தாலி கட்டிய நாளிலிருந்து எனக்குள் எழுந்த குற்ற உணர்ச்சியால் அவளோடு பேசக்கூட முடியவில்லை. வாழவும் முடியவில்லை, உண்மையை சொல்லி விளக்கவும் முடியவில்லை. அவளோடு படுக்கையை பகிரவும் முடியவில்லை.
என் முட்டாள்தனத்தால் அவளின் வாழ்க்கையை கெடுத்து தினமும் மரணவேதனையில் இருப்பதை விட, நான் மரணத்தை ஏற்றுகொள்ள முடிவு செய்துவிட்டேன். நான் போனபின் அவள் நல்லபடியாய் வேறு வாழ்க்கையை அமைத்து கொள்ளவேண்டும். நீங்கள் ஒரு அண்ணனாய் அவளுக்கும் உதவுவீர்கள்! எனக்கு தெரியும். நான் போகிறேன் அண்ணா! அம்மாவையும் தம்பிகளையும் பார்த்துகொள்ளுங்கள்.
உங்கள் அன்பு பாலா!"
கண்ணீர் திரையில் படித்து முடித்த கடிதத்தை பையில் வைத்துவிட்டு எழுந்தேன். ' நீங்கள் என்னை புரிந்து கொள்வீர்களென்று தோன்றவில்லை', கடிதத்தின் இந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே இருக்கிறது. அலுவலகம் செல்ல மனமில்லை. விடுப்பு சொல்லிவிட்டு மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று பிரகாரத்தில் உட்கார்ந்து ஆசுவசபடுதிக்கொண்டேன். மனம் ஐந்து மாதங்கள் முன்னே பறந்தது. என் தம்பி குட்டியை நிலைகுலைய செய்த என் வார்த்தைகள் மீண்டும் என்னுள் ஒலித்தது.
ஒருநாள் குட்டியின் கணிப்பொறியில் அவன் பார்த்த இணையதளங்களில் சில சம்பால் ஈர்ப்பு இணையதளங்கள் இருப்பது கண்டு அவன் அறைக்கு சென்றேன். "இது என்ன?" என்று கேட்ட எனக்கு அவன் தன்னை சமபால் ஈர்ப்புகொண்டவன் என்று கூறியதும் கோபம் தலைக்கேற அறைந்துவிட்டேன். இது வரை தன்னை திட்டிகூட பேசாத அண்ணன், அடித்ததால் அதிர்ச்சியிலிருந்து மீளாத அவன் தலையில் மேலும் நெருப்பை கொட்டின என் வார்த்தைகள். "நாயே! என்ன இதெல்லாம்? பசங்க கூடவா?". "அண்ணா...இது..." என்று ஏதோ சொல்ல தொடங்கிய அவனை முறைத்துவிட்டு, "ச்சே! எனக்கு விளக்கம் எதுவும் வேண்டாம்! இத நம்ம அப்பா, அம்மாவால எப்படி ஏத்துக்க முடியும்? மத்தவங்க நம்மள மதிப்பாங்களா? ஒழுங்கா ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ" என்றேன். அவனது மௌனம் என்னை மேலும் மிருகமாய் மாற்றுயது. அவன் மீது காரி உமிழ்ந்து, "நீயெல்லாம் வாழறதுக்கு சாவறதே மேல். இனிமே என்கூட பேசாத! என்னை பொறுத்த வரைக்கும் நீ செத்துட்ட! உன்னால இந்த குடும்பத்துக்கு அவமானம் வரத விட நீ இல்லாம போறது பரவால்ல", சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றேன்.
அன்றிலிருந்து குட்டி யார்கிட்டேயும் சரியாய் பேசவில்ல. அம்மாவும், கஜாவும், அப்பாவும் கேட்டும் அவன் ஏதும் சொல்லவில்லை. அதன் பிறகு நடந்தேறிய சம்பவங்களால் குட்டியின் மனவேதனையை என்னால் யோக்கிக்க கூட முடியவில்லை. இப்போது புரிகிறது. அவனும் பாலாவை போலவே யாரிடமும் சொல்லமுடியாமல் தவித்துக்கொண்டு இருப்பான். இத்தனை தூரம் அவமானப்படுத்திய என்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லையே! எத்தனை வெட்கப்பட வேண்டிய நடத்தை என்னுடையது? ஒருவேளை பாலா என்னிடம் இதுபற்றி சொல்லிருந்தால் குட்டியிடம் நடந்துகொண்டதைப் போலதான் தான் நடந்திருப்பேனோ? குட்டியும் பாலாவை போல முடிவெடுத்துவிட்டால்? இல்லை! இன்னொரு தம்பியை இழக்க முடியாது! முதலில் குட்டியிடம் மன்னிப்பு கேட்டு, அவனிடம் பேசி முழுதும் அவனைப் புரிந்துகொள்ள வேண்டும். வீட்டிலும் நேரம் பார்த்து மற்றவர்க்கு புரியவைத்து அவன் நன்றாய் வாழ ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். ஒரு அண்ணனாய் அவனுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டும்.
மனம் கனிய கபாலீஸ்வரருக்கு தண்டமிட்டுவிட்டு, ரயில் நிலையம் நோக்கி நடக்கையில், இலகுவான மனதில் சிரித்த முகமாய் பாலா தெரிந்தான். கண்ணீர் மல்க என் மனம் நிறைத்துசொல்கிறேன், "என் தம்பிகளின் வாழ்க்கைக்கு நல்ல வழி காட்டி, என்னையும் மனிதனாய் மாற்றிவிட்டாய். நன்றி பாலா! "